< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்
|9 April 2024 6:27 AM IST
கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை,
கோவை கிராஸ்கட் சாலையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, வந்த மர்மநபர் ஒருவர், ரிங்கு குமார் என்ற தொழிலாளியின் சட்டைப் பையில் இருந்து செல்போனை திருட முயன்றுள்ளார்.
அப்போது சுதாரித்துக் கொண்டு விழித்த ரிங்கு குமாரை, அந்த மர்மநபர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து ரிங்கு குமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.