திருவள்ளூர்
காதலி இறந்த சோகத்தில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
|காதலி இறந்த சோகத்தில் மீஞ்சூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோகித்குமார் (வயது 21). இவர் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சியில் உள்ள கேசவபுரம் கிராமத்தை தனியார் குடியிருப்பு ஒன்றில் சக தொழிலாளிகளுடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பீகாரில் காதலி இறந்து விட்டதாக அவருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ரோகித்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தங்கி இருந்த வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மீஞ்சூர் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் தொங்கி கிடந்த வடமாநில தொழிலாளி ரோகித்குமார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.