வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - டெண்டர் வெளியீடு
|வெள்ளப் பாதிப்புகளை குறைக்க ஏதுவாக நீர்வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னை,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூபாய் 20 கோடியில் ஆப்லைன் டெண்டர் விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலூரில் பராமரிப்பு பணிக்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்புகளை குறைக்க நீர்வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை குறைக்க ஏதுவாக நீர்வழித்தடங்களில் பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு பணிகள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
2023-2024 ஆம் ஆண்டிற்கான பருவமழைக்கு முந்தைய ஆயத்தப் பணிகளின் முன்னுரிமைப் பட்டியல், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மற்றும் சென்னை மண்டலத்தின் பிற மாவட்டங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மற்றும் பின்வரும் விஷயங்களை முன்னிலைப்படுத்தியது.
சென்னையின் முக்கிய நீர் வழிகளான கூவம் ஆறு, அடையாறு ஆறு பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நுால் மற்றும் விருகம்பாக்கம் கால்வாய், அத்துடன் கடலூர் மாவட்டத்தில் ஆற்று வாய்க்கால் மற்றும் வெள்ளம் தாங்கி வடிகால் அமைக்கப்படுகிறது நீர்வளத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.