திருப்பூர்
பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம்
|உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இலவச சுகாதார வளாகம் உள்ளது.
தளி
உடுமலைக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர். அவர்கள் பயன்பெறும் வகையில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இலவச சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் ஓரிரு மாதங்கள் பயன்பாட்டில் இருந்தது. அதன்பின்னர் சுகாதார வளாகம் மூடப்பட்டு விட்டது. இதனால் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது " இலவச சுகாதார வளாகம் அருகில் கட்டண சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனால் இலவச சுகாதார வளாகம் பூட்டப்பட்டது. கட்டண சுகாதார வளாகத்தில் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பயன்பாடு இல்லாமல் உள்ள பெண்கள் சுகாதார வளாகத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.அத்துடன் கட்டண சுகாதார வளாகத்தில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.