< Back
மாநில செய்திகள்
குளத்து மீன்களுக்கு மாறிய அசைவ பிரியர்கள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

குளத்து மீன்களுக்கு மாறிய அசைவ பிரியர்கள்

தினத்தந்தி
|
21 May 2023 6:45 PM GMT

குளத்து மீன்களுக்கு மாறிய அசைவ பிரியர்கள்

மீன்பிடி தடைகாலம் எதிரொலியால் குளத்து மீன்களுக்கு அதிக அளவில் அசைவபிரியர்கள் மாறிவருகின்றனர். விலை குறைவால் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

மீன்பிடி தடைகாலம்

பேராவூரணி அருகே கிழக்கு கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீனவர்கள் மீன்பிடித்து அவற்றை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

குளத்து மீன்களுக்கு மாறிய மீன்பிரியர்கள்

பேராவூரணி பெரியகுளத்தில் குத்தகைதாரர்கள் ஜிலேபி, கெண்டை, விரால் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த குளத்து மீன்களை வாங்க மீன்பிரியர்கள் அதிக அளவில் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். விலையும் குறைந்து காணப்படுவதால் அதிக அளவில் வாங்குகின்றனர். மீன்பிடி தடைகாலம் எதிரொலியாக மீன்பிரியர்கள் குளத்து மீன்களுக்கு மாறியுள்ளனர். ஒரு கிலோ ஜிலேபி மீன் ரூ.150-க்கும், விரால்மீன் கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரையும், கெண்டை மீன்கள் கிலோ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது மீன்பிடி தடை காலத்தினால் குளத்து மீன்களின் வரத்து அதிகமாக காணப்படுகிறது. அவற்றின் விலை குறவைாக இருப்பதால் விற்பனையும் அதிகமாக காணப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்