< Back
மாநில செய்திகள்
சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
அரியலூர்
மாநில செய்திகள்

சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
26 May 2022 8:01 PM GMT

சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவ சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. பின்னர் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று முடிந்தன. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மகா பூர்ணாகுதி நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தனர். இதனைத்தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கடம் புறப்பாட்டின் போது வேத மந்திரங்கள் முழங்க கோவிலை வலம் வந்தனர். பின்னர் விமானத்திற்கு கடத்தில் இருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின்னர் சிவசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.

மேலும் செய்திகள்