< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்த யாருக்கும் விருப்பமில்லை, ஆனால்..." - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
|19 Oct 2023 5:47 PM IST
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பது தொடர்பாக அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்தார்.
ஈரோடு,
ஈரோட்டில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை யதார்த்தமான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.
டாஸ்மாக் மதுக்கடைகளை நடத்த யாருக்கும் விருப்பமில்லை. ஆனால் அதை திடீரென்று மூடிவிட முடியாது. படிப்படியாக தான் குறைக்க முடியும். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.