< Back
மாநில செய்திகள்
திருவாரூரில் ஒ.என்.ஜி.சி.யின் பயன்பாடற்ற எண்ணெய் கிணற்றில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது - மாவட்ட கலெக்டர் உத்தரவு
மாநில செய்திகள்

திருவாரூரில் ஒ.என்.ஜி.சி.யின் பயன்பாடற்ற எண்ணெய் கிணற்றில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது - மாவட்ட கலெக்டர் உத்தரவு

தினத்தந்தி
|
11 Aug 2022 9:34 PM IST

பயன்பாடற்ற கச்சா எண்ணெய் கிணற்றில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என ஒ.என்.ஜி.சி.க்கு திருவாரூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேந்தமங்களம் அருகே கடந்த 2012 ஒ.என்.ஜி.சி. நிறுவனத்தால் தோண்டப்பட்ட கிணறு 2013 ஆம் ஆண்டில் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் அந்த எரிவாயு கிணற்றை நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு சரியான முறையில் மூடவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு மற்றும் பேரிழப்பு ஏற்படாமல் எரிவாயு கிணற்றை மூட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றபின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் பயன்பாடற்ற கச்சா எண்ணெய் கிணற்றில் எந்தவித பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுள்ளதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்