< Back
மாநில செய்திகள்
மெரினாவில் நாளை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை - சென்னை காவல்துறை
மாநில செய்திகள்

மெரினாவில் நாளை இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை - சென்னை காவல்துறை

தினத்தந்தி
|
30 Dec 2023 6:36 PM IST

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது.

சென்னை,

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது கூறுகையில்,

* சென்னை மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை

* இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்

*குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை

*மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாலைகளில் சாகசங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்

* புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது. என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்