< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மனசாட்சி உள்ள யாரும் குறை சொல்ல மாட்டார்கள்' - அமைச்சர் சேகர் பாபு
|16 Sept 2023 11:01 PM IST
தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கொளத்தூர் பள்ளி மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை,
முதல்-அமைச்சரின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பாராட்டி கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் ஆயிரம் பூங்கொத்துகள் மற்றும் ஆயிரம் கிலோ மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார். அப்போது ஆயிரம் என்ற எண் வடிவில் அமர்ந்து மாணவிகள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டமிடலுக்கு கிடைத்த வெற்றி இது என்று குறிப்பிட்டார். மேலும் மனசாட்சி உள்ள யாரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.