< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"யாரும்... சாமி தரிசனம் செய்யக்கூடாது.." - சிதம்பரம் தீட்சிதர்கள் வாக்குவாதம்
|24 Jun 2023 10:19 PM IST
அறிவிப்பு பலகையை அகற்ற சென்ற அதிகாரி, போலீசாருடன் தீட்சிதர்கள் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவை ஒட்டி, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர். ஆனி திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு 24, 25, 26 மற்றும் 27 தேதிகளில் கனகசபை மேல் அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்தனர். இந்த அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னறிவிப்பின்றி வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாளை காலை சிதம்பரம் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.