< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பிளவக்கல் பெரியாறு அணைக்கு யாரும் செல்ல வேண்டாம்
|15 May 2023 1:12 AM IST
பிளவக்கல் பெரியாறு அணைக்கு யாரும் செல்ல வேண்டாம் என வனத்துைறயினர் அறிவித்து உள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள பிளவக்கல் பெரியாறு அணையில் தற்போது தொடர்மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக உள்ளது. ஆதலால் பிளவக்கல் பெரியாறு அணை மற்றும் பேச்சிக்கனி பகுதியில் பொதுமக்கள் குளிக்க செல்கின்றனர். காட்டு யானைகள் தற்போது பிளவக்கல் பெரியாறு அணைப்பகுதியில் கூட்டமாக சுற்றித் திரிவதால் பொதுமக்கள் யாரும் அணை பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.