< Back
மாநில செய்திகள்
திராவிடத்தையும், தி.மு.க.வையும் யாராலும் அழிக்க முடியாது - அமைச்சர் பொன்முடி
மாநில செய்திகள்

'திராவிடத்தையும், தி.மு.க.வையும் யாராலும் அழிக்க முடியாது' - அமைச்சர் பொன்முடி

தினத்தந்தி
|
17 Sept 2023 6:15 AM IST

தமிழக மக்கள் நிரந்தரமாக இனி தி.மு.க.விற்கு தான் வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

விழுப்புரம்,

தி.மு.க. தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு விழுப்புரம் நகர தி.மு.க. அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிடத்தையும், தி.மு.க.வையும் அழித்துவிடலாம் என சிலர் நினைப்பதாகவும், ஆனால் அது யாராலும் முடியாது என்றும் கூறினார். மேலும் தமிழக மக்கள் நிரந்தரமாக இனி தி.மு.க.விற்கு தான் வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



மேலும் செய்திகள்