< Back
மாநில செய்திகள்
சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது.. அது உலகத்தின் நீதி - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
மாநில செய்திகள்

'சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது.. அது உலகத்தின் நீதி' - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

தினத்தந்தி
|
5 Oct 2023 8:58 PM IST

சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்றும், அது உலகத்தின் நீதி என்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்றும், அது உலகத்தின் நீதி என்றும் கூறினார். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது;-

"அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையை உடையது தான் சனாதன தர்மம். ஆனால் சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காக சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார்கள். சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது. அது உலகத்தின் நீதி."

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்