< Back
மாநில செய்திகள்
கட்டண மாற்றம், சலுகை ரத்து என்பதில் புதிய அறிவிப்பு இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்
மாநில செய்திகள்

கட்டண மாற்றம், சலுகை ரத்து என்பதில் புதிய அறிவிப்பு இல்லை: போக்குவரத்து கழகம் விளக்கம்

தினத்தந்தி
|
18 April 2023 12:34 PM IST

கட்டண மாற்றம், சலுகை ரத்து என்பதில் புதிய அறிவிப்பு எதுவும் இல்லை என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது

சென்னை

கட்டண மாற்றம், சலுகை ரத்து என்பதில் புதிய அறிவிப்பு எதுவும் இல்லை என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. போக்குவரத்து கழகம் மேலும் கூறுகையில், " ஏசி படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சாதாரண நாட்களில் 10 சதவீத கட்டணம் குறைவாக வசூலிக்கப்படும். 2018-ல் இருந்து இதுபோன்ற நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது இந்த இரண்டு பேருந்துகளில் பின்பற்றப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கோடை விடுமுறை முழுவதும் லீன் கட்டண முறை நீக்கம் செய்யப்படுகிறது.

மேலும் அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகளில், வார நாட்களில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ரூ.50 முதல் ரூ.150 வரை கூடுதலாக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் ஜூன் 15 வரை கட்டணச் சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போதிய வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக வெளியான நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்