< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை- வானதி சீனிவாசன்
|20 Feb 2024 2:44 PM IST
தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை, தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. வேளாண் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை. தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.