'ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்தாத எந்த இயக்கமும் வென்றதில்லை' - சீமான்
|உலக வரலாற்றில் ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்தாத எந்த இயக்கமும் வென்றதில்லை என்று சீமான் தெரிவித்தார்.
புதுக்கோட்டை,
கட்சி தொடர்பான விவகாரங்களில் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயலாக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது;-
"ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்தாத எந்த இயக்கமும் உலக வரலாற்றில் வென்றதில்லை. அறிவுப்பூர்வமாக சிந்தித்து உணர்வுப்பூர்வமாக செயலாக்கம் செய்ய வேண்டும். கட்சியை வழிநடத்துபவன் நான். எந்த பொறுப்புக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது எனது வேலை. இதில் தனிப்பட்ட நபர்கள் முடிவுகளை எடுக்க முடியாது.
ஆயிரம் பேர் பயணிக்கும் கப்பலாக இருந்தாலும் அதை ஒரு மாலுமி தான் ஓட்ட வேண்டும். அறுபது பேர் பயணிக்கும் பேருந்தாக இருந்தாலும் அதை ஒரு ஓட்டுனர் தான் ஓட்ட வேண்டும். அனைவருக்கும் ஓட்டத் தெரியும் என்பதற்காக ஸ்டியரிங்கை பிடித்து திரும்பினால் விபத்து தான் ஏற்படும். இது ஜனநாயக அமைப்பு. இஷ்டம் இருந்தால் இருக்கலாம், இல்லாவிட்டால் போகலாம்" என்று சீமான் தெரிவித்தார்.