< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பா.ஜனதாவில் தொடரும் எண்ணம் இல்லை - திருச்சி சூர்யா
|21 Jun 2024 5:39 PM IST
பா.ஜனதாவில் தொடரும் எண்ணம் இனியும் இல்லை என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
திருச்சி,
தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக பதவி வகித்த திருச்சி சூர்யா, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. என் தலைவர் குறித்து பேசியதற்கு நான் பதில் அளித்தேன். அதற்கு, நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். தமிழக பா.ஜனதாவில் பயணிக்கும் எண்ணம் இனியும் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.