< Back
மாநில செய்திகள்
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் கிடையாது - அரசாணை வெளியீடு
மாநில செய்திகள்

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் கிடையாது - அரசாணை வெளியீடு

தினத்தந்தி
|
24 May 2023 11:06 AM IST

தமிழ்நாட்டில், 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் கிடையாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



மேலும் செய்திகள்