< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் - துணைத்தலைவர் வாக்குவாதத்தால் பரபரப்பு

தினத்தந்தி
|
25 Nov 2022 9:15 PM IST

சேலத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம்,

சேலத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மணிகண்டன், காசோலைகளில் கையெழுத்திடுவதில்லை என்றும், ஊராட்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் தமிழரசி தலைமையில் நடந்த கூட்டத்தில், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது இதை எதிர்த்து ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி தலைவரிடம் கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்