< Back
மாநில செய்திகள்
குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு - உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மாநில செய்திகள்

'குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு' - உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தினத்தந்தி
|
15 Oct 2023 4:34 AM IST

அனைத்து பள்ளிகளிலும் ‘குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுதிமொழி ஏற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தை குழந்தை திருமணம் இல்லாத மாநிலமாக மாற்றும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் வரும் 16-ந்தேதி(நாளை) வழிபாட்டு கூடத்தில் 'குழந்தை திருமணம் இல்லா தமிழ்நாடு' என்ற பெயரில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வற்புறுத்தலின் பேரில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தெரியவந்தால் அதனை தடுத்து நிறுத்துவேன்' என உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்காக குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்போம் என உறுதிமொழி ஏற்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்