< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் நேரத்தில் மாற்றமில்லை - அமைச்சர் முத்துசாமி பேட்டி
மாநில செய்திகள்

டாஸ்மாக் நேரத்தில் மாற்றமில்லை - அமைச்சர் முத்துசாமி பேட்டி

தினத்தந்தி
|
12 July 2023 5:12 PM IST

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று அமைச்சர் முத்துசாமி மீண்டும் விளக்கமளித்துளார்.

சென்னை,

காலையிலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா என்று சர்ச்சை எழுந்த நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் நேரத்தில் மாற்றமில்லை என்று அமைச்சர் முத்துசாமி மீண்டும் விளக்கமளித்துளார். மேலும், வழக்கம் போல நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்ற அரசிடம் எந்த திட்டமும் இல்லை. 90 மிலி மதுபாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மது குடிப்போர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். டாஸ்மாக் வியாபாரிகளின் ஊதியம் குறித்து 18 சங்க நிர்வாகிகளிடம் பேசி வருகிறோம்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் இடம் குறைவாக இருப்பதால் பில்லிங் இயந்திரம் வைக்க முடியாமல் உள்ளது. புதிதாக இடமாற்றம் செய்யப்படும் கடைகளின் அளவு 500 சதுர அடிக்கும் மேல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இடவசதி உள்ள கடைகளில் பில்லிங் இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்