< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் 75-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
|4 Aug 2022 6:47 AM IST
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் தொடர்ந்து 75-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.