< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் கிடையாது: சலூன் கடையை மூடிச்சென்ற நபர் அதிரடி கைது
|2 Dec 2022 5:33 PM IST
பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல் கடையை மூடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே, பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல் கடையை மூடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் பகுதியில் இரட்டைகுவளை முறை பின்பற்றி வருவதாகவும், பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது மற்றும் கடைகளில் பொருட்கள் விற்கக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல், கடையை மூடி சென்ற வீரமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்