< Back
மாநில செய்திகள்
தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எற்றம்
மாநில செய்திகள்

தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எற்றம்

தினத்தந்தி
|
20 Nov 2022 1:13 PM IST

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

அப்போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடல்காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகப்பட்டிணம், எண்ணூர், காட்டுப்பட்டி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நாளை, நாளை மறுநாள் மிககனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மழை பெய்வதற்கான வாய்ப்பு மட்டுமே இருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்