< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினத்தந்தி
|
22 Oct 2023 6:45 PM GMT

தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்டல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று நள்ளிரவு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 8.30 மணி அளவில் ஒடிசா பாரதீப்புக்கு தெற்கே சுமார் 590 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்காளம் டிகாவுக்கு தெற்கே சுமார் 740 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவியது இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள் மேற்கு வங்க கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போன்று அரபிக்கடலில் தேஜ் புயல் அதிதீவிர புயலாக மாறி வருகிறது. இதனால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

இதனை தொடர்ந்து தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதை உணர்த்தும் வகையில் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டு உள்ளது. இதனால் கப்பல்கள் காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

மேலும் செய்திகள்