கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
|கடலூர்:
கடந்த சில நாட்களாக அந்தமான் அருகே வங்கக்கடலில் ஓர் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக அப்போது கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது மேலும் வடக்கு, வட கிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக மாறும். பின்னர் மேலும் வலுவடைந்து, புயலாக மாறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு சித்தரங்கு என்ற பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பரவலான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்மண்டலம் உருவானதை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் 1-ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.