< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
|14 Aug 2022 10:44 PM IST
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர் முதுநகர்,
ஒடிசா மாநிலம் அருகே வங்கக் கடலில் நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் பாலச்சூரிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். மேலும் இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.