< Back
மாநில செய்திகள்
என்.எல்.சி. சுரங்கத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

என்.எல்.சி. சுரங்கத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
30 Aug 2022 12:25 AM IST

வேலையில் இருந்து நிறுத்தியதால் என்.எல்.சி. சுரங்கத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மந்தாரக்குப்பம்,

நெய்வேலியில் சுரங்கம் 1, 2 மற்றும் 1 அ ஆகிய அனல்மின் நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் என்.எல்.சி. சுரங்கம் 2-ல் கரிவெட்டி, மும்முடி சோழகன், ஊ.மங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அவர்களை வேலைக்கு வர வேண்டாம் என நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், சுரங்கம் 2-ன் நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்