< Back
மாநில செய்திகள்
என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்
கடலூர்
மாநில செய்திகள்

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி கட்டிய கிராம மக்கள்

தினத்தந்தி
|
11 Sept 2023 12:11 AM IST

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கிராம மக்கள் கருப்பு கொடி கட்டினர்.

சேத்தியாத்தோப்பு,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சுரங்க விரிவாக்கம், புதிய சுரங்கம் அமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சேத்தியாத்தோப்பு அருகே புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட பெரியநற்குணம், ஆதனூர், வீரமுடையாநத்தம் உள்ளிட்ட கிராமங்களில் 3-வது சுரங்கம் அமைக்க இருப்பதாக என்.எல்.சி. நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் மேற்படி கிராமங்களில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் நேற்று கருப்பு கொடி கட்டினர். இதுபற்றிய தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீசார் விரைந்து வந்து வீடுகளின் முன்பு கட்டி இருந்த கருப்பு கொடிகளை அகற்றினர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்