< Back
மாநில செய்திகள்
என்எல்சி புதிய பொறியாளர் பட்டியல் விவகாரம்: தமிழக இளைஞர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் - எல்.முருகன்
மாநில செய்திகள்

என்எல்சி புதிய பொறியாளர் பட்டியல் விவகாரம்: "தமிழக இளைஞர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும்" - எல்.முருகன்

தினத்தந்தி
|
30 July 2022 1:27 PM GMT

என்எல்சி பொறியாளர் தேர்வில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.

சென்னை,

மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியா நிறுவனம் புதிதாக பொறியாளர்களை தேர்வு செய்தது. இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட 299 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

என்எல்சி நிறுவனம் சுற்று வட்டாரப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் போது அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தது. ஆனால் இதற்கு எதிராக தமிழகத்தைச் சாராத பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது நிலங்களை வழங்கியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் என்எல்சி பொறியாளர் தேர்வில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, குறிப்பிட்ட பணிக்கு எத்தனை தமிழர்கள் விண்ணப்பித்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் தேர்வு வெளிப்படையாக நடைபெற்றதாகவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

மத்திய அரசு நிறுவனங்களின் பணிகளுக்கு அதிகமாக விண்ணப்பியுங்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசு மத்திய அரசோடு இணைந்து அதன் திட்டங்களை நன்றாக செயல்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்