< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
என்எல்சி விவகாரம்: அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை
|2 May 2023 10:41 AM IST
என்எல்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
சென்னை,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம், தற்போது 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், என்.எல்.சி விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட விவசாய பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தலைமைச் செயலாளர் தலைமையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சி.வி.கனேசன் முன்னியில் மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.