< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க முடிவு...!
|10 Jan 2024 8:37 PM IST
குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகை இடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
நெய்வேலி,
என்.எல்.சி ஒப்பந்த தொழிலார்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று கடலூரில் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். இதனால் போலீசார் அவர்களை குடும்பத்துடன் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.பின்னர் மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்.எல்.சி நிர்வாகத்துடன் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை வேலைநிறுத்த போராட்டம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மேலும் குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏந்தி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகை இடவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.