< Back
மாநில செய்திகள்
என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் - விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
7 Aug 2023 4:23 PM IST

என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தியுள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் இடையூறு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி விவசாயி முருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் அறுவடையை முடித்து நிலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கடலூர் விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக அறுவடை செய்யக்கூடாது என்றும் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியம், தொழில், உட்கட்டமைப்பு வளர்ச்சி விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்று கூறியுள்ளார். ரூ.25 லட்சம் இழப்பீடு என்பது 2014-ம் ஆண்டுக்குப் பிறகு கையகப்படுத்திய நிலங்களுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்