< Back
மாநில செய்திகள்
கடலூர் வளையமாதேவியில் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம்
மாநில செய்திகள்

கடலூர் வளையமாதேவியில் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம்

தினத்தந்தி
|
1 Oct 2023 4:40 PM IST

வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி. நிர்வாகத்தினர் நிலங்களை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2-ம் சுரங்க விரிவாக்கப் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி இன்று வளையமாதேவி பகுதியில் நிலங்களை சமன் செய்யும் பணி நடைபெற்றது.

அப்போது அங்குள்ள கிராம மக்கள், நிலங்களை கையகப்படுத்தியதற்கு இன்னும் முழுமையான இழப்பீடு வந்து சேரவில்லை என்று கூறி, பணிகளை தொடர எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் என்.எல்.சி. அதிகாரிகள் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், என்.எல்.சி. நிர்வாகத்தினர் விரிவாக்கப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டுச் சென்றனர். தொடர்ந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்