< Back
மாநில செய்திகள்
என்.ஐ.டி. மாணவர் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி
திருச்சி
மாநில செய்திகள்

என்.ஐ.டி. மாணவர் நீச்சல் குளத்தில் மூழ்கி பலி

தினத்தந்தி
|
13 Feb 2023 1:51 AM IST

என்.ஐ.டி. மாணவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

3 குழந்தைகளின் தந்தை

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த தாமஸ் அகஸ்டினின் மகன் பாபு தாமஸ்(வயது 37) எலக்ட்ரானிக் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு(பி.எச்டி) படித்து வந்தார்.

இதையொட்டி இவர் அங்குள்ள கல்லூரி குடியிருப்பில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவரது குடும்பத்தினர் எர்ணாகுளத்தில் வசித்து வருகின்றனர்.

சாவு

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக பாபு தாமஸ் சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள், பாபு தாமசை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பாபு தாமசை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்