< Back
மாநில செய்திகள்
இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல்
மாநில செய்திகள்

இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல்

தினத்தந்தி
|
7 May 2024 9:25 PM IST

ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல் செய்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி (வயது 54). இவர் தன்னிடம் படிக்கும் சில மாணவிகளிடம் செல்போனில் பேசி, நான் சொல்லும் சில வழிமுறைகளை கேட்டால் உங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறி, மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்த முயற்சி செய்தார் என்று கடந்த 2018-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் நிர்மலாதேவியை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2.42 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், இடைக்கால ஜாமீன் கோரி நிர்மலா தேவி மனு தாக்கல் செய்துள்ளார். கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரியும் இடைக்கால ஜாமீன் கோரியும் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நிர்மலா தேவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்