< Back
மாநில செய்திகள்
நீலகிரி: காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

நீலகிரி: காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
16 March 2024 7:04 AM IST

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவ்வாறு வந்த காட்டு யானை ஒன்று, சூண்டி பகுதியில் பிரசாந்த் என்ற இளைஞரை தாக்கியுள்ளது. அப்போது அவர் கால்வாயில் விழுந்துள்ளார்.

யானை தாக்கியதாலும், கால்வாயில் விழுந்ததாலும் பலத்த காயமடைந்த பிரசாந்திற்கு, கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக உதகை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்