< Back
மாநில செய்திகள்
நீலகிரி: தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்
மாநில செய்திகள்

நீலகிரி: தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்

தினத்தந்தி
|
16 May 2023 10:29 AM IST

நீலகிரியில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், குற்றச்சாட்டு உறுதியானதால் தேர்வு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 5 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இந்த சூழலில் மே 8-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கணித பாடத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில் சில மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகி வந்ததால், கணித பாடத்தில் தோல்வி என்று அறிவிக்கப்பட்டது அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும், இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் நீலகிரியில் பன்னிரெண்டாம் வகுப்பு கணிதத் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் தவிர 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்