< Back
மாநில செய்திகள்
நீலகிரி: நடு ரோட்டில் மரக்கிளைகளை போட்டு யானைகள் அட்டகாசம்
மாநில செய்திகள்

நீலகிரி: நடு ரோட்டில் மரக்கிளைகளை போட்டு யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
2 Jun 2024 4:25 PM IST

நீலகிரி மாவட்டம் மூலக்கடை பகுதியில் 2 காட்டு யானைகள் சாலையில் முகாமிட்டன.

நீலகிரி,

நீலகிரியில் காட்டு யானைகள் ஒருசில நேரங்களில் சாலைகள், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வலம் வருகின்றன. அவ்வாறு வரும் யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள மூலக்கடை பகுதியில் 2 காட்டு யானைகள் சாலையில் முகாமிட்டன. அப்போது அங்கிருந்த மரக்கிளைகளை உடைத்து சாலையில் போட்டு, அதில் இருந்த இலைகளை சாப்பிடத் தொடங்கின.

தொடர்ந்து சாலையை விட்டு விலகாமல் யானைகள் அப்பகுதியை ஆக்கிரமித்து நின்றுகொண்டிருந்ததால் அய்யன்கொல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் மனம் மாறி காட்டுக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

மேலும் செய்திகள்