சிவகங்கை
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்
|பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கப்பட்டது. நகராட்சி நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி உத்தரவின் பேரில் நகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பர்மா காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் என 1240 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆணையாளர் ரெங்கநாயகி தலைமை தாங்கினார். நகர்மன்ற துணை தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். ்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம், களப்பணி உதவியாளர் ராஜலிங்கம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக், ஹரினி, பிரபு சிவராணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்