< Back
மாநில செய்திகள்
கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இரவு காவலாளி - அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இரவு காவலாளி - அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
19 Sept 2022 10:40 PM IST

நாமக்கல்லில் இரவு காவலாளி கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர், கடந்த 2 ஆண்டுகளாக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், வழக்கம்போல் பேரூராட்சி அலுவலகத்திற்கு பணிக்கு வந்த பரமசிவம், அதிகாலை வேளையில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, 4 தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்