< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு "பெண்களால் பெண்களுக்காக" இரவு நேர நடை மாரத்தான்
|15 Aug 2024 2:37 AM IST
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ஈரோடு,
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இன்று காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை ஆகும்.
இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, 'வளர்ந்த பாரதம்' என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் "பெண்களால் பெண்களுக்காக" இரவு நேர நடை மாரத்தான் (ஆகஸ்ட் 14 நள்ளிரவு 12.00 மணி) நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.