< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
இரவுநேர ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும்
|6 July 2023 12:45 AM IST
இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
அவளூர் போலீஸ் நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் கொண்டுவரும் மனுக்கள் மீது காலதாமதம் செய்யாமல் உடனடி தீர்வு காணவேண்டும்.
இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும்பொருட்டு இரவு ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். போலீஸ் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குற்றச்சம்பவங்களில் பறிமுதல் செய்து, போலீஸ் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் திருட்டு போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து போலீஸ் நிலைய பதிவேடுகளையும் சரிபார்த்தார். காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிவேல் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.