< Back
மாநில செய்திகள்
இரவு நேரத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

இரவு நேரத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:30 AM IST

வால்பாறையில் இரவு நேரத்தில் தூய்மைப்பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


வால்பாறை நகராட்சி ஆணையாளர் பெர்ப்பெற்றிடெரன்ஸ் லியோன் உத்தரவின் பேரிலும் துப்புரவு அதிகாரி செந்தில்குமார் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் வீரபாகு முன்னிலையில் நகராட்சி மார்க்கெட் பகுதி, நகர் பகுதியை சுற்றியுள்ள தங்கும் விடுதிகள், காய்கறி கடைகள் ஆகிய இடங்களில் தேங்கும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் இரவில் கூடுதல் பணி செய்து குப்பைகளை சேகரிக்கும் பணியை செய்து வருகின்றனர். இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில் இரவில் தங்கும் விடுதிகள், மார்க்கெட் பகுதிகள், ஹோட்டல் மற்றும் காய்கறி கடைகளில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகளை அடுத்த நாள் சென்று அகற்றுவதற்குள் கால்நடைகள், குரங்குகள் குப்பைகளை கிளறி நடைபாதைகளில் சிதறடித்து விடுகிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தூய்மை பணி செய்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே காலை முதல் மாலை வரை தேங்கும் குப்பைகளை இரவு அகற்றி விடுவதால் அடுத்த நாள் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியை மேற்கொள்வதற்கு வசதியாக உள்ளது. எனவே இரவில் குப்பைகளை சேகரிக்கும் பணியை செய்து வருகிறோம் என்றனர். இரவில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு அடுத்த நாள் இரண்டு மணி நேர பணி சலுகையும் வழங்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் பகுதியில் இரவில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணி வரவேற்கத்தக்கது என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தூய்மைப் பணியாளர்களை பாராட்டினர்.

மேலும் செய்திகள்