< Back
மாநில செய்திகள்
என்.ஐ.ஏ. சோதனை: நாம் தமிழர் கட்சி சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
மாநில செய்திகள்

என்.ஐ.ஏ. சோதனை: நாம் தமிழர் கட்சி சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு

தினத்தந்தி
|
2 Feb 2024 11:53 AM IST

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினருடன் தொடர்பில் உள்ளதாக எழுந்த புகார், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன், தென்காசி மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதேவேளை, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வரும் 7-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி என்.ஐ.ஏ. சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் என்.ஐ.ஏ. சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர முறையீட்டை பிற்பகலில் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி ரமேஷ் அறிவித்துள்ளார். என்.ஐ.ஏ. அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் உடனடியாக சோதனையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்