< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை...!
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை...!

தினத்தந்தி
|
15 Feb 2023 7:21 AM IST

சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னை, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி உள்பட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், திருநெல்வேலியின் ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, தூத்துக்குடியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மொத்தம் 3 மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றுவருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்