< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை

தினத்தந்தி
|
30 Jun 2024 9:04 AM IST

ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிகாலை 5 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட 'ஹிஜ்புர் தகர்' இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் சோதனை நிறைவடைந்ததும் என்ஐஏ தரப்பிலிருந்து வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்