< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
போலி பாஸ்போர்ட் வழக்கு: மதுரையில் என்.ஐ.ஏ. சோதனை
|11 Oct 2023 10:14 AM IST
மதுரையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
போலி பாஸ்போர்ட், ஐதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போன்ற வழக்குகள் தொடர்பாக மதுரையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள காஜிமார் தெருவில் உள்ள முகமது தாஜுதீன் என்பவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முகமது தாஜுதீன் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது சகோதரர் உஸ்மான் தாஜுதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. போலி ஆவணங்கள் அளித்து பாஸ்போர்ட் வாங்கிய வழக்கு, ஐதராபாத் மற்றும் லக்னோவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கு தொடர்பாகவும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.