< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
|10 Feb 2024 7:02 AM IST
நெல்லை, கோவை, மதுரை உள்பட 8 மாவட்டங்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை,
சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.கோவை உக்கடம் பகுதியில் அபிபுல் ரகுமான் என்பவர் வீட்டிலும் நெல்லை ஏர்வாடியில் பக்ரூதின் அலி என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
நிதி வசூல், மூளைசலைவை செய்தல், உபகரணங்கள் கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் , என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.